உணவகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு!

கோவை: காந்திபுரம் உணவகத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.


கோவை: காந்திபுரம் உணவகத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியது குறித்து இரண்டு வாரத்தில் பதில் அளிக்கும்படி கோவை மாநகர போலீஸ் கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் உள்ளே ராஜா உணவகத்தில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை போலீசார் லத்தியால் தாக்கினர். அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்பரப்பாக வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்று கோவை மாநகர போலீஸ் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் சார்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த தாக்குதல் குறித்து இரண்டு வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் துணை ஆணையர் மூலம் இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துமீறி தாக்குதல் நடத்திய முத்து என்கிற சப்-இன்ஸ்பெக்டர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...