காந்திபுரம் உணவகத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்!

கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் தாக்கியதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் தாக்கியதற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை காந்திபுரம் பகுதியில் 11-04-2021 அன்று இரவு 10 மணிக்கு ரோந்து வந்த காந்திபுரம் C1 காவல் நிலைய காவலர்கள் அந்தப் பகுதியில் இருந்த உணவகத்தில் உணவு அருந்திக் கொண்டு இருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

துணை ஆய்வாளர் முத்து தலைமையில் காவல்துறையினர் பொதுமக்கள், அக்கடையின் ஊழியர்கள் உள்ளிட்டோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை கண்டனத்திற்குரியது. கொரோனா நோய் தொற்று பரவல் விதிகளை மீறி இருந்தால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தாக்குதல் நடத்துவது சரியானது அல்ல

தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீசாரை இடம் மாற்றம் செய்வது சரியான தீர்வு அல்ல. காவல்துறையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் நடவடிக்கை தேவை,” என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட குழு வலியுறுத்தியுள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...