காந்திபுரம் உணவகத்தில் போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கமல்ஹாசன் கண்டனம்

கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை தாக்கிய போலீசாருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை தாக்கிய போலீசாருக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காந்திபுரம் உணவகத்தில் போலீசார் நடத்திய தாக்குதலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “இரவு 11 மணியைத் தாண்டி உணவகங்கள் செயல்படக் கூடாது என்பது அரசின் ஆணை. கோவை காந்திபுரத்தில் பத்தரை மணிக்கு முன்னதாகவே போலீஸ் ஒரு உணவகத்தில் புகுந்து அங்கிருந்தவர்களை தாக்குகிறது.

இது சாத்தான்குளம் படுகொலையை நினைவு படுத்துகிறது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு நிர்வாகத்தின் கடமை ஆகும்,” என காரசாரமாக பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் காந்திபுரம் உணவகம் தாக்குதல் தொடர்பாக போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் துணை ஆணையர் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...