கோவை: காந்திபுரம் உணவகத்தில் வாடிக்கையாளர்களை போலீசார் அத்துமீறி தாக்கியதற்கு திமுக எம் எல் ஏ கார்த்திக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக உணவகங்கள், டீ கடைகளில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி, இரவு 11 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில் கார்த்திக் எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கையில், “நேற்று(ஏப்ரல் 11) இரவு கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் 10.20 மணி அளவில் சிலர் உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்து கொரோனாவை காரணம் காட்டி, உணவருந்தி கொண்டிருந்த மக்கள் மற்றும் கடை ஊழியர்களை லத்தியால் தாக்கியுள்ளார். இதில் பெண் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு 11 மணி வரை 50 சதவீதம் பேருடன் இயங்க உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடையை மூடுவதற்கு நேரம் இருக்கும்போது கடையை மூடக் கூறி மிரட்டியதும் இல்லாமல், வாடிக்கையாளர்களையும் காவல்துறையினர் தாக்கிய சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக அரசு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று கூறியுள்ளார்.