திருப்பூர்: அரக்கோணத்தில் இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் திராவிடர் விடுதலை கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணத்தை அடுத்த சோமனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக அர்ஜுனன், சூர்யா என்கிற இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த சூர்யாவுக்கு திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருக்கிறது. இன்னொருவர் அர்ஜுனனுக்கு திருமணமாகி 8 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த இரட்டை கொலை தொடர்பாகஅதிமுகவை சேர்ந்த பழனி என்பவரின் மகன் சத்யா உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். கொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும்,உயிரிழந்த இளைஞர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.