கோவில்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி!

கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில் பாளையத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கோவில்பாளையத்தில் நடைபெற்ற கொரானா தடுப்பூசி முகாமில் 100க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கொரோனா தொற்றின் 2-வது அலையின் தாக்கம் கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுகாதாரத்துறை சார்பில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கிணத்துக்கடவு பகுதியில் நேற்று வரை 2 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இதில் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



இந்த முகாமில் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா, நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சமித்தா உள்ளிட்ட சுகாதார துறை சார்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...