கோவை: கோவை அருகே நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நூல்கள் எரிந்து நாசமாகின.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி செந்தில் நகரைச் சேர்ந்த வையாபுரி அப்பன், சாந்தி சைஸ் சிங்மில் என்ற பெயரில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக வார்ப்பு நூற்பாலை நடத்தி வருகிறார்.
இவரது நூற்பாலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அன்னூர், அவிநாசி, பீளமேடு, பல்லடம் ஆகிய பகுதிகளிலிருந்து வந்த 5 தீயணைப்பு வாகனங்கள் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் பலகோடி ரூபாய் மதிப்புள்ள நூல்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கருமத்தம்பட்டி சோமனூர் பகுதிகளில் நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள் அதிக அளவில் உள்ளன. எனவே, இங்கு அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டி கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றோம்.
ஆனால், இதுவரை தீயணைப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. வெளியூர்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அதிக அளவில் பொருட்கள் எரிந்து நாசமாகின்றன. எனவே கருமத்தம்பட்டி பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். தீ விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.