கோவை: கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் காந்திபுரம் உணவகத்திற்குள் புகுந்து மக்கள் மீது போலீசார் தாக்கியதற்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பி.ஆர்.நடராஜன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
“கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தில் உணவு உட் கொண்டிருந்த பெண்கள் உள்ளிட்டவர்களை போலீசார் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற உணவகத்தில் மொத்தம் 6 பேர் கூட இல்லை. மேலும் இரவு 10 மணிக்கு இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம். கடையில் ஐம்பது சதவீதம் அளவுக்கு அமர்ந்து சாப்பிடலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் போலிசாரின் இந்த தாக்குதல் கடும் கண்டனத்திற்குரியது. ஒருவேளை அரசு வழிகாட்டுதலை மீறியிருந்தால் கூட சட்டப்படியான அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் போலீசார் லத்தியால் தாக்குவதற்கு யார் அதிகாரம் அளித்தார்கள்.
அதுவும் பெண்கள், குழந்தைகள் என பாராமல் உணவு உட் கொண்டிருந்தவர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வன்மையான கண்டனத்திற்குரியது. இதனை ஒருபோதும் ஏற்க முடியாது. தற்போது சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளரை வேறு துறைக்கு மாற்றியதாக அறிகிறோம். இது போதுமானதல்ல.
இந்நடவடிக்கை வெறும் கண்துடைப்பாகவே பார்க்கிறோம். சம்பந்தப்பட்ட காவல் உதவியாளர் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுள்ளார். உடனடியாக சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாநகர காவல் ஆணையர் உத்தரவிட வேண்டும்”. இவ்வாறு நடராஜன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.