கோவையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வேனில் ரூ.12.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்!

கோவை: கோவையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வேனில் ரூ.12.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: கோவையில் சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வேனில் ரூ.12.5 லட்சம் மதிப்பிலான பான்மசாலா தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் எஸ்.ஐ., செல்வநாயகம் மற்றும் போலீசார், நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள மணிகாரம்பாளையம், மவுன்டன் வியூ குடியிருப்பு பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேனில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, 12.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார், 500 கிலோ எடைகொண்ட பான் மசாலா பாக்கெட்கள், 18 அட்டை பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கங்காதரன்(42) என்பவரை கைது செய்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...