கோவை: இந்து முன்னணி பிரமுகர் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டதை ஒட்டி தனிப்படை அமைக்கப்பட்டு வாகனங்கள் தணிக்கை செய்து தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

கோவை போத்தனூரிலுள்ள தாயம்மாள் லே அவுட்டை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (37) உக்கடம் நகர இந்து முன்னணி துணை தலைவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு, சுந்தராபுரம் சங்கம் வீதி ரோடு சந்திப்பு அருகே செல்லும்போது, பைக்கில் வந்த இருவரில் பின்னால் இருந்தவர், இரும்பு ராடால், இவரது மண்டையில் தாக்கினார்.
அப்போது, காயமடைந்த ராமகிருஷ்ணன். அப்பகுதியிலிருந்த முருகேசன் என்பவரிடம், தன்னை தாக்கியது குறித்து கூறியுள்ளார். முருகேசன், ராமகிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.
பின்னர் இது குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு அருகேயுள்ள 'சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ராமகிருஷ்ணனை தாக்கிய இருவர், சங்கம் வீதி வழியே பொள்ளாச்சி நாட்டிற்குச் சென்று தப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து, மாநகரில் முக்கிய இடங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை சுந்தராபுரத்தில் வெடிகுண்டு கண்டறியும் பிரிவு போலீசார், மோப்ப நாய்களின் உதவியுடன், சந்தேகத்திற்கிடமான வாகனங்களை சோதனையிட்டனர்.
இந்த நிலையில், இந்து அமைப்பினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மறியல் நடத்தச் சென்றனர். இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியமும் அங்கு வந்தார். குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவதாக, போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின், உறுதியளித்ததையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.