கோவையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கோவையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 52 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 52 வயது மதிக்கத்தக்க பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் அடுத்த விக்ரம் பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சரஸ்வதி (52), இவரது மகன் ராம்குமார் (30).

இந்நிலையில், ராம்குமார் சரஸ்வதியும் மோட்டார் சைக்கிளில் நேற்றுமாலை கோவையிலிருந்து அன்னூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே, மைல்கல் அருகே மற்றொரு மோட்டார் பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் ராம்குமாரும் சரஸ்வதியும் படுகாயமடைந்தனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, விபத்து ஏற்படுத்திய பைக் ஓட்டுனர் தினேஷ் (25) மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...