கோவையில் ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போலீசார்..! காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவு!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திடீரென ஓட்டலுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களையும் பொருட்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திடீரென ஓட்டலுக்குள் சாப்பிட்டுக்கொண்டிருந்த மக்களையும் பொருட்களையும் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை காந்திபுரம் காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருவது ராஜா ஹோட்டலாகும்.

இந்நிலையில், நேற்று இரவு அங்கு 6க்கும் மேற்பட்ட பயணிகள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து உட்பட 4 காவலர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து ஓட்டலை சூறையாடி, பொருட்களை அடித்து நொறுக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை லத்தி சார்ஜ் செய்து அடித்து நொறுக்கினர். இதில் நான்குக்கு மேற்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டது. ஒரு பெண்ணிற்கு மண்டை உடைந்தது.

இந்நிலையில், இன்று காலை ஓட்டல் உரிமையாளர் மோகன்ராஜ் கோவை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதம் புகார் மனு அளித்திருந்தார். உடனடியாக புகார் மனுவை பெற்ற ஆணையர் காட்டூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

மேலும், உடனடியாக உதவி ஆணையர் தலைமையில் விசாரணை செய்து உடனடியாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளார். அதனால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...