கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர். அரசு போக்குவரத்து அலுவலர்களுக்கான குடியிருப்புப் பகுதி. சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் காணப்பட்டது.
கோவை: கோவை விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன்மாநகர். அரசு போக்குவரத்து அலுவலர்களுக்கான குடியிருப்புப் பகுதி. சேரன் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் காணப்பட்டது.
இதுகுறித்து 'சிம்பிளிசிட்டி' ஆன்லைன் ஊடகத்தில் முதலில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, சிதிலமடைந்த சாலைகள் சரி செய்யப்பட்டு தற்பொழுது தார் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கு 'CAPA' நுகர்வோர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு சங்க(CAPA') தலைவர் ரவி சங்கர் கூறுகையில்,
எங்கள் சங்கம் சார்பில் கள நிலவரம் குறித்த தகவலையும் தெரிவித்தோம். "சேறு மாநகராக மாறிய சேரன்மாநகர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது இந்த பகுதி முழுவதும் சாலைகள் சரி செய்யப்பட்டு தார் சாலை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. மக்கள் பிரச்சனையை வெளியிட்டு அதற்கு தீர்வு காண உதவிய 'சிம்பிளிசிட்டி' ஆன்லைன் ஊடகத்திற்கு எங்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்".