கோவை: மூலப்பொருட்கள் விலையை குறைத்து சிறு தொழில் நிறுவனங்களை பாதுகாக்கும்படி கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து கோவை ,திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின்(காட்மா)தலைவர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "கொரோனா நோய் தொற்று பரவல் முதல் அலை ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து தொழில் துறையினர் இன்னும் முழுமையாக மீண்டு வர இயலவில்லை.
இந்த சூழ்நிலையில், இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாத சூழ்நிலையிலும், குறுந்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவை தற்காலிகமாக மூட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
மூலப்பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றமே இதற்கு காரணமாகும். ஆறு மாதங்களுக்கு முன்பு 48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட மைல்டு ஸ்டீல், தற்போது 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது, தற்போது 245 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
பித்தளை 390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தற்போது 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அலுமினியம் 190 ரூபாய்க்கு இருந்தது தற்போது 250 ரூபாய்.காப்பர் முன்பு 550 ரூபாய், தற்போது 730 ரூபாய் என உயர்ந்துள்ளது.
பல்வேறு மூலப் பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து உள்ளது. ஒரு பொருள் உற்பத்திக்கு கொட்டேஷன் கொடுத்து பணியைத் தொடங்குவதற்கு முன் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் குறுந்தொழில் முனைவோர் தவித்து வருகின்றனர்.
முழு ஊரடங்கு அமலில் இல்லாத சூழ்நிலையிலும் தொழில் நிறுவனங்களை தற்காலிகமாக மூட வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மத்திய அரசு மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீரான விலை, போதுமான அளவு அனைத்து தொழில்துறையினருக்கு தங்குதடையின்றி மூலப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கையில் காத்திருக்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.