கோவையில் 3677 பேருக்கு கொரோனா சிகிச்சை..! மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்

கோவை: மீண்டும் கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவையில் நேற்று மட்டும் 501 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உட்பட கோவையில் 3677 பேர் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கோவை: மீண்டும் கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கோவையில் நேற்று மட்டும் 501 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் உட்பட கோவையில் 3677 பேர் தற்போது வரை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை கருப்பண்ண கவுண்டர் வீதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து, அப்பகுதியில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.



இந்நிலையில், நேற்று முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ள நிலையில், நேற்றைய தினமே டவுன்ஹால் தியாகி குமரன் சந்தை, காந்திபுரம் உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்கள், கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் உட்பட மாநகராட்சி அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, முக கவசங்கள் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியவர்கள், முக கவசம் அணியாதவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று உக்கடம் பேருந்து நிலையம் பகுதியில், கோவை மத்திய மண்டல மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் மற்றும் மண்டல சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, பேருந்தில் முகக்கவசம் அணியாதவர்கள், பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்கள் டீ கடை, பேக்கரி உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் என 30க்கும் மேற்பட்டவர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர். பேருந்தில் முகக் கவசம் அணியாமல் அமர்ந்திருந்த நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், அபராத தொகையை செலுத்தாதவர்களை பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டனர்.

கோவையில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க, மாநகராட்சி பகுதிகளில், சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று காய்ச்சல், சளி அறிகுறிகள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த முறை கொரோனா பரவலின்போது, 8 பரிசோதனை கூடங்கள் மட்டுமே செயல்பட்ட நிலையில், தற்போது, 25 பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பரிசோதனை மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், சிங்காநல்லூர், இரயில்நிலையம் பகுதிகளில் ஒலிப்பெருக்கிகள் மூலம் விழிப்புணர்வுகளையும் சுகாதார பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...