திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் லாரியை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது மோதியதில் 7 வயது குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி கதிரவன் என்பவர் குடிபோதையில் லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி காமநாயக்கன்பாளையம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் லாரின் அடியில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ஒரு காரில் பயணம் செய்த கார்த்திகேயன் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது 7 வயது மகள் தனிகா ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். லாரியின் அடியில் சிக்கிய காரை கிரேன் உதவியுடன் உடைத்து மீட்ட தீயணைப்பு துறையினர் காரில் சிக்கியிருந்த கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தாரின் உடலை மீட்டனர்.
இந்த விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் லாரி ஓட்டியதால் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.