கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் துடியலூரில் செயல்பட்டுவரும் தனியார் சினிமா திரையரங்கம் மற்றும் ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் ச.மதுராந்தகி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை மற்றும் வடக்கு மண்டலம் துடியலாரில் செயல்பட்டுவரும் தனியார் சினிமா திரையரங்கம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி துணை ஆணையாளர் அவர்கள், ஆர்.எஸ்.புரம் உழவா் சந்தையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 27 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

பின்னர், துடியலூரில் செயல்பட்டுவரும் தனியார் திரையரங்கத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்ட பின்னர், துடியலூரில் செயல்பட்டுவரும் நகாப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சத்தி சாலையில் செயல்பட்டுவரும் தனியார் மாலில் வாடிக்கையாளா்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை
கடைபிடிக்கின்றார்களா, மாலிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வெப்பமானியைக் வெப்ப அளவு பரிசோதனை செய்யப்படுகின்றதா என ஆய்வு செய்த பின்னர், அந்த மாலில் செயல்பட்டுவரும் திரையரங்கத்திற்கு சென்று பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது நகர்நல அலுவலர் மரு.ராஜா, வடக்கு மண்டல உதவி ஆணையர் மகேஷ் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.