அரக்கோணம் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து உதகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

நீலகிரி: அரக்கோணம் சோகனூர் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து உதகை ஏடிசி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


நீலகிரி: அரக்கோணம் சோகனூர் இரட்டை கொலை சம்பவத்தை கண்டித்து உதகை ஏடிசி திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளருக்கு வாக்களித்து தேர்தல் பணி மேற்கொண்ட 5 பேர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.

இதில் மூன்று பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேர் உயிரிழந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு நீலகிரி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன் தலைமையில் உதகை ஏடிசி பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



சாதி ரீதியிலான கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அதே போல் குடிசைகளுக்கு தீ வைத்தவர்கள் மீதும் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டம் மூலம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...