கோவையில் பேருந்துகளில்‌ பயணிகள்‌ நின்று பயணித்ததால்‌ 4 பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம்‌ விதிப்பு!

கோவை: கோவை மாநகராட்சி காந்திபுரம்‌ பேருந்து நிலையங்களில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து, ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி காந்திபுரம்‌ பேருந்து நிலையங்களில்‌ கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து, ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சி கொரோனா நோய்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்‌ தொடர்ச்சியாக, கோவை மாநகராட்சி காந்திபுரம்‌ பேருந்து நிலையங்களில்‌ இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ,ப., அவர்கள்‌, பேருந்து நிலையங்களில்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்த 15 நபர்களுக்கு தலா ரூ.200 வீதம்‌ அபராதம்‌ விதித்தும்‌, பேருந்துகளில்‌ பயணிகள்‌ நின்று பயணித்ததால்‌ 4 பேருந்துகளுக்கு தலா ரூ.500 அபராதம்‌ விதித்தார்.



பின்னர்‌, அப்பகுதியில்‌ செயல்பட்டு வந்த உணவகங்கள்‌, பேக்கரிகளில்‌ பணிபுரிபவர்கள் மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ முகக்கவசம்‌ அணிகின்றார்களா என ஆய்வு மேற்கொண்ட பின்னர்‌, அப்பகுதியில்‌ செயல்பட்டு வந்த தனியார்‌ ரெஸ்டாரென்டில்‌ வாடிக்கையாளர்கள்‌ முகக்கவசம்‌ அணியாமல்‌ இருந்ததால்‌ அதன்‌ உரிமையாளருக்கு ரூ.1000 அபராதம்‌ விதித்தார்.

பின்னர், மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,

பொதுமக்கள்‌ வெளியே செல்லும்‌ போதும்‌, பொது இடங்களிலும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும்‌, நோய்‌ தொற்று அறிகுறி இருந்தால்‌ தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்‌. இதனை கடைபிடித்து கொரோனா நோய்‌ தொற்று பரவாமல்‌ இருக்க அரசு எடுக்கும்‌ நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ அனைவரும்‌ முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்‌ என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்‌ ரவிச்சந்திரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, மண்டல சுகாதார அலுவலர்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...