கோவை - இலங்கை இடையே விமான சேவை மீண்டும் துவக்கம்..! புதிய 'ஏர் பபுள்' ஒப்பந்தம் நேற்று முதல் அமல்!

கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை - இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளது.



கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை - இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் துவக்கப்பட உள்ளது.

கோவை - இலங்கை இடையே 'ஏர் பபுள்' ஒப்பந்தம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் துவங்கும் வரையில், இந்த ஒப்பந்தம் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா - இலங்கை இடையே விமான நிறுவனங்கள் சர்வீஸ் துவக்கி கொள்ளலாம். தொழில், வணிகம், மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு பணிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் இவ்விரு நாட்டினரும் பயணம் மேற்கொள்ள விமான சர்வீஸ் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர நோய்த்தொற்று பரவல் காரணமாக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை ஏர்லைன்ஸ் நிறுவனங்களும், பயணிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு (Colombo), ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவை வழங்கி வந்தது. நோய்த் தொற்று பரவல் காரணமாக சேவை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், 'ஏர் பபுள்' ஒப்பந்தம் அமலுக்கு வந்ததால், மீண்டும் கோவை - இலங்கை இடையே விமான சர்வீஸ் துவக்கப்பட உள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...