கோவையில் மொபைல் யூனிட் மூலமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடிவு!

கோவையில் மொபைல் யூனிட் மூலமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நான்கு மண்டலங்களும் சேர்த்து ஒரே நாளில் 2716 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது


கோவை: கோவையில் மொபைல் யூனிட் மூலமாக வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நான்கு மண்டலங்களும் சேர்த்து ஒரே நாளில் 2716 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.

கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை மட்டுமின்றி, மாநகராட்சியால் நடத்தப்படும், 32 மகப்பேறு மருத்துவமனைகளிலும், கொரோனா தடுப்பூசி இலவசமாக போட்டுக் கொள்ளலாம்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதியில், நாளை (11ம் தேதி), மொபைல் யூனிட்டுகள் துவக்கப்படுகின்றன. வீதி வீதியாகச் சென்று தடுப்பூசி போடப்படுகிறது.

எனவே, மக்கள் மாநகராட்சி மருந்தகங்களுக்கு தாமாக முன்வந்து, தடுப்பூசி போட்டு வருகின்றனர். வடக்கு மண்டலத்தில் 695, மேற்கு - 683, மத்திய மண்டலம் - 560, தெற்கு - 430, கிழக்கு மண்டலத்தில் 348 என, நேற்று ஒரே நாளில், 2,716 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இதனிடையே, கருப்ப கவுண்டர் வீதியில் மாநகராட்சி பகுதியில், நேற்று ஒரே நாளில், 248 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 16 பேர் இருப்பிடம் இன்னும் கண்டறியப்படவில்லை. 3 இடங்களில் மீண்டும் சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது.

கருப்ப கவுண்டர் வீதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த, 16 வீடுகளில் வசிப்போருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள நான்கு கட்டிடங்கள் அடைக்கப்பட்டன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...