கோவை: பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சபரிமாலா கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் வரதராஜனுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் சபரி மாலா தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி ஒக்கிலிபாளையம் கிராமத்தில் சபரிமாலா பிரச்சாரத்தின் போது அதிமுகவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 2 தரப்பினர் மீதும் வடக்கிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இதனிடையே, சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு முடிவடைந்த நிலையில், ஜோதி நகர் பகுதியில், நேற்று நள்ளிரவு சபரிமாலா தங்கியிருந்த வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு அந்த சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை வைத்தும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.