வன்னியருக்கு இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல்!

கோவை: வன்னியருக்கு இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை, குரும்பபாளையம் பெருமிழலை குரும்பநாயனார் சமுதாய அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: வன்னியருக்கு இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை, குரும்பபாளையம் பெருமிழலை குரும்பநாயனார் சமுதாய அறக்கட்டளை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசால், கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அரசாணையின் படி, மிக பிற்பட்டோருக்கான 20 சதவிகித உள் இடஒதுக்கீட்டில், வன்னிய சமுதாயத்தினருக்கு மட்டும் 10.5 சதவிகிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 20 சதவிகித இடஒதுக்கீட்டில் கடந்த 32 ஆண்டுகளாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பயன்பெற்று வந்த குரும்பர் சமுதாயம் உட்பட, 28 சாதியினர் மிகவும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்தப்படாமல், வன்னியர்களுக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்கியதை, பாதிக்கப்பட்ட மற்ற சமுதாயத்தினர் கண்டித்துள்ளனர்.

எனவே, அவசர கதியில் வெளியிடப்பட்ட அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, இது தொடர்பாக, ஏற்கனவே மற்ற சமுதாயத்தினர் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 8க்கு தள்ளிவைத்தார்.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...