வால்பாறையில் சாலை பராமரிப்பு பணிகள் தாமதம் - பொதுமக்கள் அவதி!

கோவை: வால்பாறையில் சாலை பராமரிப்பு பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.


கோவை: வால்பாறையில் சாலை பராமரிப்பு பணிகள் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை முடீஸ் சாலையில் உள்ளது தாய் முடி எஸ்டேட்.

இந்த சாலை வழியாக முடிஸ், நல்லமுடி ஹைபாரஸ்ட் போன்ற பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.



கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த சாலை தேயிலைத் தோட்ட நிர்வாகத்திடம் இருந்து நகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையை டெண்டர் விட்டு சாலை தோண்டப்பட்டு பணியை துவங்கியது.



சாலையில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட உடன் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டது. நிறுத்தப்பட்ட பணிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னும் தொடங்கப்படாததால் சாலையில் நடந்து செல்ல இயலாத நிலையும் வாகனம் செல்லும் போது மிகுந்த கஷ்டப்பட்டு செல்கின்றனர். சில சமயங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக பணியை துவங்கி முடிக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...