வால்பாறை அருகே சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு வாரங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சம்!

கோவை: வால்பாறை அருகே சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு வாரங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறை அருகே சிறுவனை தாக்கிய சிறுத்தை இரண்டு வாரங்களாகியும் பிடிபடாததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த சோலையார் எஸ்டேட்டில் இரண்டு வாரங்களுக்கு முன் சிறுவன் ஒருவன் சிறுத்தை தாக்கி படுகாயம் அடைந்தான்.



இந்நிலையில், சோலையார் எஸ்டேட் பகுதியில் நடமாடும் சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து சிறுவன் தாக்கப்பட்ட இடத்திலும், மற்றொரு இடத்திலும் இரண்டு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க. வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.



மேலும், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைத்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், இரண்டு வாரங்களை கடந்தும் சிறுத்தை கண்காணிப்பு கேமராவில் சிக்காமலும் கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் இரவு பகலாக அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...