பொள்ளாச்சி அருகே செமனாமபதி பகுதியில் கேரளா கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை சிறைபிடித்த விவசாயிகள்..!

கோவை: பொள்ளாச்சி அருகே செமனாமபதி பகுதியில் கேரளா கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொள்ளாச்சி அருகே செமனாமபதி பகுதியில் கேரளா கழிவுகளை கொட்ட வந்த 3 டிப்பர் லாரிகளை விவசாயிகள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக - கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி கிராமத்தில் இரட்டை மடை என்ற பகுதியில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆண்டனி ஜோஸ் என்பவரது தோட்டத்தில், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்து ஏராளமான கழிவுகள் கொண்டுவந்து கொட்டுவதாக விவசாயிகளுக்கு தகவல் கிடைத்தது.



இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் 3 டிப்பர் லாரிகளில் கொண்டுவரப்பட்ட கழிவுகளை, பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டி மர்ம நபர்கள் கொட்டி வந்தனர்.

அப்போது, அங்கு சென்ற விவசாயிகள் லாரிகளை சிறைபிடித்து விசாரித்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடினர். பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை கைப்பற்றி, கேரள மாநிலத்தைச் சேர்ந்த தோட்டத்து உரிமையாளர், ஆண்டனி ஜோசை தேடிவருகின்றனர்.



கேரளாவிலிருந்து அடிக்கடி இது போன்ற கழிவுகளை கொண்டு வந்து விவசாய நிலங்களில் கொட்டி வருவதால், பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர் எனவும், கேரள எல்லைப் பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடிகளில் முறையான கண்காணிப்பு பணி நடைபெறுவதில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...