சன் டிவி செய்தியாளர் மோகனை தாக்கிய கமல்ஹாசனுக்கு நா.கார்த்திக் கண்டனம்!

கோவை: சன் டிவி செய்தியாளர் மோகனை தாக்கிய மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கண்டம் தெரிவித்துள்ளார்.


கோவை: சன் டிவி செய்தியாளர் மோகனை தாக்கிய மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் கண்டம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நா.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவர்கள் வந்தார். அப்போது அங்கே சன் டி வி செய்தியாளர் மோகன் செய்தி சேகரிக்க வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது மோகன் செய்தி சேகரிப்பதை தடுக்கும் வகையில் கமல்ஹாசன் தனது கையில் வைத்திருந்த கைத்தடியால் மோகனின் அலைபேசியை கீழே தட்டிவிட்டு, தாக்க முயன்றுள்ளார்.

நியாயமான முறையில், சுதந்திரமாக, செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர் மோகன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பத்திரிக்கையாளர்களை அவர்களது கடமையை செய்ய விடாமல் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். இந்த தாக்குதலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும்,” என கூறியுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...