மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என மநீம தலைவர் கமல் அறிக்கை!

சென்னை:மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


:சென்னை:மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“சட்டப்பேரவை தேர்தலில் 72 % வாக்குகள் பதிவாகி உள்ளன. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் போன்ற சூழல் இதற்கு முன்பு இருந்ததில்லை. எனினும் இந்த இக்கட்டான சூழலில் கூட 72 % பேர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி இருப்பது மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது. தமிழக மக்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

100% பங்கேற்பே ஜனநாயகம் சென்று சேர வேண்டிய இடம். இனி வரும் தேர்தல்களில் நம் பங்களிப்பு இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு ஜனநாயக நம்பிக்கை வாதியாக என் ஆசை.

இந்த தேர்தலில் என்னோடு கைகோர்த்து களம் கண்ட மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள், சக போட்டியாளர்கள், வாக்காளர்கள், தேர்தல் ஆணையம், ஊடகவியலாளர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட சகலருக்கும் என மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் என்பது முடிவல்ல. மக்கள் பணியில் முடிவு என்பதே இல்லை. என்னைப் பொறுத்தவரை இந்த தேர்தல் ஒரு புதிய தொடக்கம். எனது கட்சியினருக்கும் இது புது அனுபவம். நிறைய அனுபவங்களை கற்று முன்னநகர்ந்திருக்கின்றோம். மக்கள் அன்பை விட மகத்தான பலம் இல்லை என்பது அதில் முதன்மையானது.

தமிழகத்தை சீரமைப்போம் என்பது வெறும் தேர்தல் கோஷம் அல்ல. அது ஒரு கூட்டு கனவு. அதை நோக்கிய பாதையிலும் பயணத்திலும் சிறிதும் விலகல் இல்லை. மண்ணை, மொழியை, மக்களை காக்க இன்றுபோல் என்றும் களத்தில் நிற்போம்.”

இவ்வாறு கமல்ஹாசன் கூறி உள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...