நீலகிரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் 102 கண்காணிப்பு கேமராக்களுடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பிங்கர் போஸ்ட் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன.



மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சித் தலைவருமான இன்னசென்ட் திவ்யா தலைமையில் பொது பார்வையாளர்கள், வேட்பாளர்கள் அவர்களது முகவர்கள் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக தனித்தனியாக 3 அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய மாவட்ட ஆட்சியர், வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றி 102 கேமராக்கள் பொருத்தப்பட்டு 3 ஷிப்டுகளில் சுழற்சி அடிப்படையில் கண்காணிக்கப்படும் என்றார்.



மேலும், மத்திய ரிசர்வ் காவலர்கள் முதல் அடுக்கிலும், உள்ளூர் காவலர்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், வாக்காளர்கள் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை கண்காணிக்க தனி கூடாரம் அமைத்து டிவி வசதி செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...