கோவை: கோவையில் செய்தியாளரை கைத்தடியால் தாக்கிய கமல்ஹாசனுக்கு கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

செய்திக்காகப் படம் எடுத்த சன் டிவி செய்தியாளர் திரு.மோகனை, கைத்தடியால் தாக்கிய மக்கள் நீதி மய்யம் தலைவரின் செயல் அராஜகத்தின் உச்சம் எனக் கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிற்கு முன்பிருந்தே, தொடர்ந்து கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் கோவையில் பணியாற்றும், செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும், எந்தவிதமான மாற்றுக்கருந்துமின்றி, செய்தியாகப் பதிவு செய்து வந்தனர்.
இந்த நிலையில், இன்று காலை, கோவை அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தைப் பார்வையிட வந்த கமலை, செய்திக்காக, மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஆனால், அவரைப் படம் எடுக்கக் கூடாது என மிரட்டும் நோக்கில், தனது கையிலிருந்த கைத்தடியால் கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் கமல் நெட்டித்தள்ளியிருக்கிறார்.
ஆனால், இந்தத் தாக்குதலில் மோகனுக்கு பெரிய அளவில் காயமில்லை. இதெல்லாம் கமல் அறியாதவர் அல்ல என்றாலும், அவரது சினிமா பின்புலத்தில், நடிப்பாக அவர் பார்ப்பாரேயானால், அவருக்கு ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும். இது உங்கள் நடிப்பல்ல, உயிர் தொடர்பான பிரச்சனை கமல் அவர்களே.
செய்தியாளர் என்று தெரிந்திருந்தும், நீங்கள் இதைச் செய்திருப்பது, கோவை செய்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், செய்தியாளர் மோகன் மீதான இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, கமல் அவர்கள் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும் மன்னிப்பு கோர வேண்டும் என, கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.