வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிய மக்கள் அனைவருக்கும் நன்றி - கவுண்டம்பாளையம் திமுக வேட்பாளர் பையா ஆர். கிருஷ்ணன்

கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிய கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதி மக்கள் அனைவருக்கும் பையா ஆர். கிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக சட்டமன்ற தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையாற்றிய கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதி மக்கள் அனைவருக்கும் பையா ஆர். கிருஷ்ணன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

வாக்குக் கேட்டு நாங்கள் வந்த போது, உங்கள் வீட்டு பிள்ளையாய் நீங்கள் காட்டிய அன்புக்கும் - பாசத்துக்கும் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என உறுதியளிக்கிறோம்.

தேர்தல் அறிவித்த நிமிடத்தில் இருந்து ஒவ்வொரு நொடியும் நமது கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட, கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் எனக்காகவும், கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் திரு.வ.ம.சண்முகசுந்தரம் அவர்களுக்காகவும், ஒட்டுமொத்த கழகத்தின் வெற்றிக்காகவும் எங்களோடு இணைந்து சிறிதும் ஓய்வில்லாமல், கண் துஞ்சாமல், பசியை கூட பாராமல் தேர்தல் பணியாற்றிய மாவட்ட - பகுதி - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகங்களின் நிர்வாகிகள், கழகத்தின் அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் மாவட்ட கழகத்தின் சார்பில் நன்றிகளை சமர்ப்பித்து, அளவற்ற அன்பையும் பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் நாங்கள் இங்கு இல்லை.

மக்கள் அளித்த ஒவ்வொரு வாக்கும் வரலாற்றை மாற்றப்போகின்றவை. அதனால், வாக்கு இயந்திரங்கள் உள்ள மையங்களை இரவு - பகல் பாராது எச்சரிக்கையாக உணர்வுடன் பாதுகாத்திட உங்கள் உதவிகளை வேண்டுகிறேன்.

இத்தனை நாட்களாய் தி.மு.கழகத்திற்காகவும், எனக்காகவும், நமது கழக வேட்பாளருக்காகவும் உறுதுணையாய் நின்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் - தொண்டர்கள் மற்றும் ஊடகத்துறையினர் - பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் கோவை மாநகர் மேற்கு மாவட்ட தி.மு.க சார்பில் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

விரைவில் அடிமை ஆட்சி முடியும்.! தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில் கலைஞர் ஆட்சி விடியும்.!இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...