செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார், ராதிகாவுக்கு தலா ஒரு ஆண்டு சிறை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சென்னை: செக் மோசடி வழக்கில் நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் இருவருக்கும் 7 வழக்குகளில் தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா சரத்குமார் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் மற்றும் ரேடான் மீடியா குரூப் நிறுவனம், படம் தயாரிப்பதற்காக ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்திடம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ 2 கோடி கடன் பெற்றிருக்கிறார்கள். இதற்காக மொத்தம் 7 காசோலைகளை அளித்தனர். அதில், ஒரு காசோலை வங்கி கணக்கில் பணமில்லாததால் திரும்பியுள்ளது.

இதையடுத்து சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ரேடான் நிறுவனம் சார்பில் 7 கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், சைதாப்பேட்டை 3வது விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணை 6 மாதத்தில் விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தது.

மொத்தம் 7 வழக்குகளில் சரத்குமார் மீதான ஐந்து வழக்குகளில் தலா ஓராண்டும், மீதமுள்ள இரண்டு வழக்குகளில் சரத்குமார் ,ராதிகா சரத்குமார், பங்குதாரர் ஸ்டீபன் ஆகியோருக்கு தலா ஓராண்டும் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...