கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக அமைச்சர் வேலுமணி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு தேர்தல் பிரச்சார முடிவடைந்ததன் பின்னர் கட்சி கூட்டம், பிரச்சாரம் தொடர்பாக எந்த செயல்பாடும் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
ஆனால் கடந்த 5ம் தேதி திங்களன்று தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் அதிமுக கட்சி அலுவலகத்தில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான எஸ். பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கூட்டமாகக் கூடி இருந்தனர். கட்சி அலுவலகத்திற்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
இந்நிலையில், இது தேர்தல் விதிமுறை மீறல் என்று கூறி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அமைச்சர் வேலுமணி செல்வபுரம் பகுதி அதிமுக இளைஞரணி செயலாளர் வீரமணி, செல்வபுரம் பகுதி செயலாளர் விஜயகுமார், 77 -வது வார்டு அதிமுக செயலாளர் காட்டு துறை ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி கூடுதல் கொரோனா தொற்றுநோய் பரவும் வகையில் செயல்படுதல் என இந்திய தண்டனை சட்டப்பிரிவு 269, 143 படி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் தன்னுடைய வாக்கு செலுத்துவதற்காகச் சென்றிருந்தார்.
தேர்தல் விதி முறைப்படி 100 மீட்டர் இடைவெளி உட்பட்ட எந்த இடத்திலும் வாகனத்திற்கு அனுமதி இல்லை. மாற்றுத் திறனாளிகளுக்கும், வயதானவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இப்படி இருக்கும் பட்சத்தில் அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது வாகனத்தை வாக்குச்சாவடிக்கு அருகிலேயே வந்து நிறுத்தியதும் கட்சிக் கொடியுடன் வந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், பரப்புரை செய்யும் விதமாகவும் இருப்பதாக கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.