திருமூர்த்தி அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி!

திருப்பூர்: திருமூர்த்தி அணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


திருப்பூர்: திருமூர்த்தி அணையில் குளிக்கும் போது நீரில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணை மற்றும் திருமூர்த்தி மலை சுற்றுலா தலத்துக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது உண்டு.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கார்த்திக் என்ற கல்லூரி மாணவர் தனது உறவினர்களுடன் திருமலை வந்துள்ளார். அப்போது அணையில் தேங்கியுள்ள நீரில் குளிக்க உள்ளே இறங்கினார்.

கார்த்திக்குக்கு நீச்சல் தெரியாத நிலையில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது நீரில் மூழ்கினார். அவர் நீரில் மூழ்குவது பார்த்த உடன் வந்த உறவினர் கூச்சலிட்டு உள்ளார்.

இந்த கூச்சலை கேட்டு அங்கிருந்த மலைவாழ் மக்கள் உடனடியாக தண்ணீரில் இறங்கி கார்த்திகை மீட்க முயற்சித்தனர் ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் ரப்பர் படகு மற்றும் டியூப் மூலம் 2 மணி நேர தேடலுக்கு பின்னர் கார்த்திக்கின் உடலை மீட்டனர்.



கார்த்திக்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...