கமல் கைகுலுக்க மறந்ததால் சுயேட்சை வேட்பாளர் அதிருப்தி!

கோவை: மநீம தலைவர் கமல்ஹாசன் தன்னுடன் கைகுலுக்க வில்லை என்பதால் வருத்தம் அடைந்த சுயேட்சை வேட்பாளர் கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.


கோவை: மநீம தலைவர் கமல்ஹாசன் தன்னுடன் கைகுலுக்க வில்லை என்பதால் வருத்தம் அடைந்த சுயேட்சை வேட்பாளர் கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை திருப்பி அனுப்பியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடக் கூடிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடன் போட்டியிடக்கூடிய சக வேட்பாளர் ராகுல் காந்தி என்பவருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில் அனைவரும் ஒன்றாக கைகோர்ப்போம் என வாழ்த்துக் கூறி இருந்தார்.

அந்தக் கடிதத்தைப் பார்த்து சுயேச்சை வேட்பாளர் ராகுல் காந்தி மிகவும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட வந்திருந்தார்.



அப்போது அங்கு இருந்த சுயேட்சை வேட்பாளர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஆனால், அதே நேரத்தில் அவருடன் கைகுலுக்க மறந்து விட்டு சென்று விட்டார். இதனால் மன வருத்தம் அடைந்த ராகுல் காந்தி, கமல் எழுதிய கடிதத்தில் மட்டும் வெற்று வார்த்தைகளால் கை கோர்ப்போம் ஒன்று சேர்வோம் எனக் கூறி இருப்பதாக நினைத்து வருந்தினார்.

நேரில் பார்க்கும்போது மரியாதைக்காக ஒரு கை குலுக்க கூட முடியாமல் புறக்கணித்தது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறியுள்ள ராகுல் காந்தி, கமல் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை மீண்டும் திருப்பி அனுப்புவதாக கூறி வாழ்த்து கடிதத்தையும் அத்துடன் இணைத்து திருப்பி அனுப்பி உள்ளார்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...