கோவை மாவட்டத்தில் ஐந்து மணி வரை அதிக அளவாக பொள்ளாச்சியில் 71.48% வாக்குப்பதிவு!

கோவை: கோவை மாவட்ட தொகுதிகளிலேயே பொள்ளாச்சி தொகுதியில் ஐந்து மணிவரை அதிக அளவாக 71.48% வாக்குகள் பதிவாகி உள்ளன.


கோவை: கோவை மாவட்ட தொகுதிகளிலேயே பொள்ளாச்சி தொகுதியில் ஐந்து மணிவரை அதிக அளவாக 71.48% வாக்குகள் பதிவாகி உள்ளன.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் காலை ஐந்து மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஐந்து மணி வரை பதிவான வாக்குகளின் சதவிகிதம் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, “கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 61% பேரும், பெண் வாக்காளர்கள் 58.74% பேரும், மூன்றாம் பாலினத்தவர் 15% பேரும் வாக்களித்துள்ளனர். இந்த தொகுதியில் ஐந்து மணி வரை 59.83% வாக்குப்பதிவு நடந்துள்ளது.

சூலூர் தொகுதியில் 69.81% பேரும், 66.18% பேரும், மூன்றாம் பாலினத்தவர் 34.62% பேரும் வாக்களித்துள்ளனர். ஐந்து மணி வரை சூலூர் தொகுதியில் 67.95 % பேர் வாக்களித்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 60.66 % பேரும், பெண் வாக்காளர்கள் 59.98% பேரும், மூன்றாம் பாலினத்தவர் 15.63% பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் இந்த தொகுதியில் ஐந்து மணி வரை 60.31% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

கோவை வடக்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 54.59% பேரும், பெண் வாக்காளர்கள் 52.41% பேரும் மூன்றாம் பாலினத்தவர் 2.63% பேரும் வாக்களித்துள்ளனர். இந்த தொகுதியில் 53.50% பேர் வாக்களித்துள்ளனர்.

தொண்டாமுத்தூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 66.15 % பேர், பெண் வாக்காளர்கள் 64.17% பேர், மூன்றாம் பாலினத்தவர் 17.28% பேர் வாக்களித்துள்ளனர். இங்கு 5 மணி வரை 64.66% பேர் வாக்களித்துள்ளனர்.

கோவை தெற்கு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 56.95% பேர், பெண் வாக்காளர்கள் 53.94% பேர், மூன்றாம் பாலினத்தவர் 20.83% பேர் வாக்களித்திருக்கின்றனர். ஐந்து மணி வரை 55.44% பேர் வாக்களித்துள்ளனர்.

சிங்காநல்லூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 60.60% பேர், பெண் வாக்காளர்கள் 52.29% பேர், மூன்றாம் பாலினத்தவர் 3.85% பேர், வாக்களித்துள்ளனர். மொத்தம் 56.41% பேர் ஐந்து மணி வரை வாக்களித்துள்ளனர்.

கிணத்துக்கடவு தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 65.10% பேர், பெண் வாக்காளர்கள் 63.43% பேர், மூன்றாம் பாலினத்தவர் 21.43% பேர் வாக்களித்தனர். ஐந்து மணி வரை இங்கு 64.24 % வாக்குகள் பதிவாகின.

பொள்ளாச்சி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 73.75% பேர், பெண் வாக்காளர்கள் 69.41% பேர், மூன்றாம் பாலினத்தவர் 5.26% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஐந்து மணி வரை இந்த தொகுதியில் 71.48% பேர் வாக்களித்துள்ளனர்.

வால்பாறை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 65.34%பேரும், பெண் வாக்காளர்கள் 62.33% பேரும், மூன்றாம் பாலினத்தவர் 11.76% பேரும் வாக்களித்துள்ளனர், மொத்தம் ஐந்து மணி வரை இந்த தொகுதியில் 63.17% பேர் வாக்களித்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...