கோவை: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தாமரை சின்ன பேஜ் அணிந்து வாக்களிக்க சென்றதால் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக தலைவர், தமிழக முதலமைச்சர், நடிகர் நடிகைகள் அனைவரும் அந்தந்த தொகுதியில் தங்களுடைய வாக்குகளை செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட கூடிய பாஜக அதிமுக கூட்டணி வேட்பாளரான வானதி சீனிவாசன் தன்னுடைய தொகுதிக்குட்பட்ட வாக்கு மையத்தில் வாக்கு பதிவு செய்தார்.
அப்பொழுது அவர் தேர்தல் விதிமீறல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அவர் தாமரை சின்னத்தை தன்னுடைய இடது பக்கத்தில் அணிந்து சென்றுள்ளார். தேர்தல் நடத்தை விதிமுறை படி 100 மீட்டருக்குள் தேர்தல் சின்னத்தை கொண்டு செல்லவோ கையில் எடுத்து சொல்லக்கூடாது. 100 மீட்டருக்கு முன்பாக செய்தியாளர்களை சந்திக்கும் பொழுதும் அந்த பகுதியில் யாரிடமும் வாக்கு சேகரிக்க கூடாது என்பன போன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளன. ஆனால், வானதி சீனிவாசன் தன்னுடைய சின்னத்தை அணிந்து வாக்களித்தது பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் போட்டி வேட்பாளரான ஜெயக்குமார் கூறுகையில், உடனடியாக தேர்தல் நடத்தை விதி முறையின்படி வானதி சீனிவாசன் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதனால் கோவையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சத்யபிரதா சாகு விடம் கேட்டபோது முறைப்படி புகார் அளிக்கப் பட்ட உடன் அந்த தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் அதிகாரி விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.