தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி மீது அதிமுகவினர் தாக்குதல் - வாகனத்தை அதிமுக குண்டர்கள் உடைக்கும் காட்சிகள் வெளியீடு!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான நாகராஜனிடம் புகார் அளித்துள்ளார்.



கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் உள்ள 181 வாக்குச்சாவடியை பார்வையிட சென்றபோது, பாஜக - அதிமுகவினர் தாக்க முயற்சித்ததாக கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார்.

புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திகேய சிவசேனாதிபதி பேசுகையில், இன்று காலை 7 மணி முதல் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக செல்வபுரம் பகுதியில் உள்ள 181 வாக்குச்சாவடியில் அதிமுகவினர் அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத நபர்கள் மற்றும் பாஜகவினர் மிரட்டல் விடுத்து, தாக்கவும் முயற்சித்தனர். 

இந்த சம்பவம் நிகழ்வதற்கு உறுதுணையாக இருந்த இரண்டு காவல் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளோம். மேலும் அதிமுக, பாஜக குண்டர்கள் காவல்துறையினரின் லத்தியை பிடுங்கித் தாக்கினர். 

ஆய்வாளர், உதவு ஆய்வாளர் சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். காவல் துணை ஆணையர் ஸ்டாலின் வந்து தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார். 

இந்த சம்பவத்தால் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. தொண்டாமுத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என தொடர்ச்சியாக சொல்லி வருகிறோம். தொடர்ந்து, ஐ.ஜி., காவல்துறை ஆணையரிடமும் ஆகியோரிடமும் புகார் அளிக்க உள்ளேன் எனத் தெரிவித்தார். 

மேலும், தோற்று போவோம் என்ற அச்சத்தில் வேலுமணி இவ்வாறு செய்கிறார். புகாரின் மேல் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார். 

இதனிடையே, வாக்குச் சாவடியில் இருந்து கிளம்பிய கார்த்திகேய சிவசேனாபதியின் வாகனத்தை அதிமுக குண்டர்கள் ஆக்ரோஷமாக உடைக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...