கோவை: கோவை தெற்கு தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் கமல்ஹாசன் சென்னை தேனாம்பேட்டையில் வாக்குபதிவு செய்துவிட்டு தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதி வாக்கு சாவடிகளை பார்வையிட கோவை வந்தார்.

அதனை தொடர்ந்து, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலணி பகுதியில் உள்ள வாக்கு சாவடியை பார்வையிட்ட அவர் பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கோவை தெற்கு தொகுதியில் வாக்குப்பதிவு மிக அதிக அளவில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் தெற்கு தொகுதியில் பணப்பட்டுவாடாவும் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது.
டோக்கன் வழங்கி பொருளாக பெற்றுக் கொள்ளுமாறு கூறியதாக ரிப்போர்ட் வந்ததால், நேரில் ஆய்வு செய்ய நான் புறப்பட்டு வந்தேன். எல்லா இடத்திலும் பணப்பட்டுவாடா அதிதீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், டோக்கன் வழங்கியது தொடர்பாக விபரங்களின் நகல் என்னிடம் உள்ளது. பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிப்பேன். இதுபோன்ற குற்றச்சாட்டுகளை உறைந்து ஆய்வு செய்து தடுக்க வேண்டும். புகார்கள் அதிகரிக்க அதிகரிக்க மறு வாக்குப்பதிவிற்கு வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.