கோவை: கோவை மாவட்டத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக 92 டிகிரி முதல் 94 டிகிரி வரை வெப்பம் பதிவாகியுள்ள நிலையில், நேற்று 95 டிகிரியாக வெப்பம் பதிவானது. இது இன்று மேலும் அதிகரித்து 97 டிகிரியாக இருக்கும் என காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கோவை மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. மதிய நேரத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால், கர்ப்பிணிகள், வயதானவர்கள் ஆகியோர் காலை 7 மணி முதல் காலை 10 மணிக்குள் அல்லது மாலை 4 மணியில் இருந்து 7 மணிக்குள் ஓட்டுச்சாவடிகளுக்கு செல்வது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெயிலின் தாக்கம் காரணமாக வாக்குப்பதிவு குறைவதை தடுக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போதிய குடிநீர் வசதி, முதியவர்கள் அமர வசதி என்று போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.