கோவை: திமுகவினர் தோல்வி பயத்தால் எங்கள் மீது விதிகளைக் மீறியதாக புகார் தருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

கோவை சுகுணாபுரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அவரது மனைவி வித்தியா தேவியுடன் வந்து வாக்களித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களிடத்தில் மிகுந்த எழுச்சி இருப்பதாகவும், மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது உறுதி என்று தெரிவித்தார்.
அதிமுக அரசின் திட்டங்கள் முழுவதும் மக்களிடத்தில் சென்றிருப்பதாகவும் தொண்டாமுத்தூர் தொகுதியில் நாங்கள் யாரும் விதிகளை மீறவில்லை. தோல்வி பயத்தால் அவர்கள் அப்படி கூறுகிறார்கள். அமைச்சர் ஜெயகுமார் சொன்னது போல ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தான் விதிகளை மீறியிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.