கோவை: கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் கோவை பொம்மணம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
கோவை: கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் கோவை பொம்மணம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கோவை வடக்கு தொகுதியின் திமுக வேட்பாளர் வ.ம. சண்முகசுந்தரம் கோவை பொம்மணம்பாளையத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.
வாக்கு செலுத்திய பின், சிம்ப்ளிசிட்டிக்கு பேட்டி அளித்த அவர், மக்கள் அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை தவிர்க்காமல் செய்ய வேண்டும் என்றும், கடந்த தேர்தலை போல் குறைவான சதவீதத்தில் வாக்குகளை செலுத்தாமல் முழுமையாக அனைவரும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசிய அவர், திமுகவின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்று தளபதி மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்று உறுதிபட தெரிவித்தார்.