கோவை: கோவையில் உள்ள 4,427 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், தேர்தல் பணியில் 21 ஆயிரத்து 500 அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியது.