தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.55.47 கோடி பறிமுதல்!

கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.55.47 கோடி பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை ரூ.55.47 கோடி பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான புகார்களை பெற கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு மையம் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.

தேர்தல் விதிமுறை மீறல் வாக்காளர்களுக்கு பணம் பரிசு பொருட்கள் விநியோகித்தல் உட்பட பல புகார்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு வந்தன.

இந்த புகார்கள் தேர்தல் பறக்கும் படையினரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி நேற்று வரை 288 புகார்கள் பெறப்பட்டு 139 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 146 புகார்கள் நிராகரிக்கப்பட்டு 3 புகார்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதேபோல சி- விஜில் மொபைல் செயலி மூலம் 732 புகார்கள் வந்தன. அதில் 542 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. 155 புகார்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 5 புகார்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

பறக்கும் படை கண்காணிப்பு குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்களுக்களின் சோதனையில் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 9 லட்சத்து 27 ஆயிரத்து 220 ரொக்கப் பணமும், 2 லட்சத்து 83 ஆயிரத்து 676 ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் இதுவரை 6 கோடியே 83 லட்சத்து 77 ஆயிரத்து 318 ரூபாய் ரொக்கப் பணமும், 70 லட்சத்து 14 ஆயிரத்து 282 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களும், 47 கோடியே 91 லட்சத்து 58 ஆயிரத்து 707 ரூபாய் மதிப்பிலான இதர பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பணம் மற்றும் இதர பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்பித்தவர்களுக்கு பணமும், பொருட்களும் திருப்பி அளிக்கப் பட்டுள்ளன.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...