கோவை: கோவை நகரின் ஒரு சில பகுதிகளில் திடீரென 10 நிமிடம் தொடர்ச்சியாக மழை பெய்தது.

கோவையில் நேற்று மாலையில் இருந்து வானம் மேகமூட்டமாகவும், இடி மின்னலுமாக இருந்தது. ஆனால், சிறிது நேரம் கழித்து மேக மூட்டங்கள் கலைந்து சென்றன. இந்த நிலையில் திடீரென இன்று மாலை 5.40 மணி அளவில் உக்கடம் சாலை, இடையர்பாளையம் பகுதியில் வானில் திடீரென மேகம் திரண்டதுடன், 10 நிமிடங்களுக்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது.
ஆனால் நகரின் வேறு சில பகுதிகளில் அதுபோல மழை பெய்யவில்லை திடீர் மழையால் குளிர்ச்சி ஏற்படாது என்றும் வெப்பம் உடலில் அதிகமாகி ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளதாக அந்த பகுதி மருத்துவர்கள் தெரிவித்தனர்.