பல்லடத்தில் ரூ.1.09 கோடி பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த வாகனத்தில் ஒரு கோடியே 9 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தில் இருந்த சந்திரன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவையில் இருந்து திருப்பூரில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் 6 ஏடிஎம்மில் நிரப்புவதற்காக பணம் கொண்டு சென்றதாக கூறினார்.

ஆனால், ஏடிஎம்மில் நிரப்புவதற்கான பாஸ்வேர்டு இல்லாததால் பணத்தை திருப்பூரில் இருந்து மீண்டும் கோவைக்கு கொண்டு செல்வதாக கூறினார். கோவையில் இருந்து திருப்பூருக்கு வருவதற்கு மட்டும் ஆவணங்கள் இருந்த நிலையில், திருப்பூரில் இருந்து கோவை கொண்டு செல்வதற்கு அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லை.

எனவே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கணேசனிடம் ஒப்படைத்தனர்.இரண்டு மணி நேரத்தில் ஆவணங்களை சமர்ப்பித்து பணம் எடுத்துச் செல்ல அறிவுறுத்தப்பட்டது. ஆனால், உரிய ஆவணங்களை காட்டாததால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...