மலைகிராம மக்கள் சிரமமின்றி வாக்களிக்க வாகன வசதி!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மலைகிராம மக்கள் வாக்களிக்க வசதியாக வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மலைகிராம மக்கள் வாக்களிக்க வசதியாகவாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“நீலகிரி மாவட்டத்தில் 868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 112 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அந்த வாக்குச்சாவடிகள் இணைய வழி கேமராவால் கண்காணிக்கப்படும்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் நுண் பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 5,86,950 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு பணிக்காக 5700 அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் அலுவலர்களில் 3992 பேர் தபால் வாக்களித்துள்ளனர்.

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2490 பேர் தபால் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து, 2276 பேர் வாக்களித்துள்ளனர். மீதமுள்ளவர்கள் மே மாதம் 2ம் தேதிக்குள் வாக்களிக்கலாம்.



மலைகிராம மக்கள் சிரமமின்றி வாக்களிக்க அரசு போக்குவரத்து கழக உதவியுடன் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளுக்கு வனத்துறையினர் மற்றும் அதிரடி படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் என மொத்தம் 3,845 இயந்திரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் இதுவரை ரூ.2.46 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், ரூ.2 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறியதாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.” இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...