கோவையில் முதியோர், நோயாளிகள் வாக்களிக்க இலவச ஆம்புலன்ஸ் சர்வீஸ்!

கோவை: முதியோர் மற்றும் நோயாளிகள் வாக்களிக்க வசதியாக இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை அளிப்பதாக கோவையில் உள்ள தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.



கோவை: முதியோர் மற்றும் நோயாளிகள் வாக்களிக்க வசதியாக இலவசமாக ஆம்புலன்ஸ் சேவை அளிப்பதாக கோவையில் உள்ள தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கவிருக்கிறது. வாக்குப்பதிவின் போது தகுதி படைத்த வாக்காளர்கள் அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டியது அவசியமாகும். ஆனால் நோயாளிகள், முதியவர்கள் வாக்குச் சாவடிகளுக்கு செல்ல முடியாது என்பதால் பெரும்பாலும் அத்தகையவர்கள் வாக்களிப்பதில்லை.



தனி வாகனம் வைத்துக் கொண்டு சென்று வாக்களிக்க முடியாமல் சிரமப்படும் நோயாளிகள் வாக்களிக்க, நாளை ஒருநாள் மட்டும் கோவையை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் ஒன்று தங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடுத்து உதவ முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனத்தினர் கூறுகையில், “ஏழை எளிய மக்கள் உடல்நல குறைவால் அவதிப்படும் நிலையில் உள்ளனர். அவர்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் நாளை ஒரு நாள் எங்கள் வாகனங்களை இலவசமாக வழங்குகின்றோம். இலவச ஆம்புலன்ஸ் சேவையைப் பெற 9994522222 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தனர்.

Newsletter

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...