திருப்பூர்: திருப்பூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 120 சவரன் நகை மற்றும் 20 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்-தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த சபியுல்லா (54) பிரிண்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 2 ந் தேதி வீட்டைப் பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சென்று விட்டார்.

இன்று காலை ஊரிலிருந்து திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அங்கிருந்த 120 சவரன் நகை மற்றும் 20 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இதையடுத்து சபியுல்லா வீரபாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.