திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3343 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 3343 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில்திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி(தனி), பல்லடம், காங்கேயம், தாராபுரம்(தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.
8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3343 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 8 தொகுதிகளிலும் 137 பேர் களத்தில் உள்ளனர். திருப்பூர் தெற்கு, பல்லடம் மற்றும் காங்கயம் ஆகிய மூன்று தொகுதிகளில் இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகளிலுள்ள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் 297 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அனுப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் 17,500 ஊழியர்கள், அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்றனர். மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மற்றும் மாநகரில் சுமார் 800 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.துணை ராணுவப்படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மாவட்டம் முழுவதும் 3500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.